அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்..?
கொழும்பு போர்ட்சிட்டி துறைமுக நகரத்துக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நட்டுவைத்த அடிக்கல்லை சிலர் அகற்றியிருப்பதாக வெளிவந்த செய்திகள் குறித்து கவனம் செலுத்துமாறு அரச தலைமை பாதுகாப்புத்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாம்.
தேர்தல் காலமென்பதால் எதிர்க்கட்சியினருக்கு நன்மை பயக்கும் விதத்திலும் ஆளுங்கட்சியினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலும் மறைமுகமாக சதிவேலையொன்றை யாரும் செய்திருக்கிறார்களா என்பது பற்றி ஆராயப்படுகிறதாம்.
கொழும்பில் ஷங்கிரி லா ஹோட்டல் நிர்மாணிக்கப்படும்போது கோல்பேஸிலுள்ள அமரர் பண்டாரநாயக்கவின் சிலையை அகற்றப்போவதாகவும் கூறினார்கள். ஆனால், அப்படி நடக்கவில்லை.
இதிலெல்லாம் அரசியல் செய்யமாட்டோமென அரச தலைவர் ஒருவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறினாராம்.
இருட்டில் மொட்டு கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுவரும் தாமரைக் கோபுரத்தில் இரவுநேர மின்விளக்குகள் எரிவதை தேர்தல் முடியும் வரை நிறுத்திவைக்குமாறு முக்கிய அரசியல்வாதியொருவர் உத்தரவு பிறப்பித்துள்ளாராம்.
தாமரை மொட்டு இரவுநேரம் ஒளிர்வது பொது எதிரணியான மஹிந்த அணிக்கு மறைமுக பிரசாரமாக அமைந்துவிடும் என்பது அந்த அரசியல்வாதியின் வாதமாம்.
கொழும்பு மாவட்டத்தின் பச்சைக் கட்சியின் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரே இப்படி பணிப்புரை விடுத்துள்ளார் எனத் தகவல்.
Post a Comment