Header Ads



யார்யார் எனது வாளுக்கு இறையாகின்றனர் என, நான் அறியவில்லை - ஜனாதிபதி

உள்ளாட்சி தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கொள்கை பிரகடனம் இன்று வெளியிடப்பட்டது.

கொழும்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சுதந்திர கட்சியைச் சேர்ந்த பல அமைச்சர்களுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம், செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபாகணேசன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கீதையில் உபதேசிக்கப்பட்டுள்ளதைப் போன்று, நாட்டின் நலனுக்காக பாரபட்சம் இன்றி ஆட்சியை நடத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

பகவத் கீதையில், தமது வாளுக்கு தமது உறவினர்களா, எதிரிகளா, நண்பர்களா பலியாகின்றனவர் என்பதை தான் அறியேன், ஆனால் ஆற்ற வேண்டிய கடமைக்காக யுத்தம் புரிவதாக உபதேசிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, நாட்டின் நலனுக்காவும், அரசியலை புனிதமாக பேணுவதற்காகவும், தமது உறவினர்களோ, எதிரிகளோ, நண்பர்களோ யார்யார் தமது வாளுக்கு இறையாகின்றனர் என்பதை தாம் அறியவில்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. ஐயோ! தாங்க முடியவில்லை எனது சிரிப்பை.. கடந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் கொலை போன்றவற்றை இல்லாமல் செய்து ஊழல் மோசடி செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த இவர் இன்று தனது கட்சி தலைமையை காப்பாற்ற அவர்களுடன் சேர்ந்து கொண்டு இப்படி ஜோக் அடிக்கிறார்... MGR ன் பாடல்களை சொல்லி கொடுத்தாள் இப்படியான நேரத்தில் பாடுவார்.. "ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்"

    ReplyDelete
  2. உங்கள் வாலை நாங்கள் 2015 முதல் இன்று வரை பார்த்து விட்டு அது வேட்ட ்்இயலதா மொட்ட வால் என்று நாட்டு மக்களுக்கு தெரியும்.

    ReplyDelete
  3. SLFP அங்கத்துவத்தை வைத்துக்கொண்டே கூட்டு எதிரணி, பொதுஎதிரணி பூ, மொட்டு என சின்னங்களை வைத்துக்கொண்டும் சவால் விட்டுக்கொண்டு ஒரு கும்பல் உம்மை விரட்டியடிப்பதற்கு ஆயத்தமாகிறானுகள். நீர் என்னடான்டா கீதை, வாழு, இரை என ஒலி வாங்கி வீரணாக வலம் வரும் உம்மை நினைத்தால் கடுப்பாக இருக்குது ஜனாதிபதியே.

    ReplyDelete
  4. உங்களின் பேச்சை நம்புகின்றோம் இன்று ஒரளவு இந்த நாடில் முஸ்லிம்கள் நிம்மதியாக இருக்கின்றார்கள் என்றால் அது உங்களுடைய தலமைத்துவதின்கீழ்தான் ரணீல் அவர்கள் உங்கள் பெயர்களை களங்கள் படுதியது யாவரும் அறிந்த உண்மை அந்த வகையில் இம்முறை கொழும்பு மாநகரம் வரலாறு காணாத வெற்றி உம்முடைய கட்சி எடுக்கும் என்பது உண்மை இருந்து ஒரு ஊழல் இல்லாத ஜனாதிபதி என்றால் அது நீங்கதான் இந்த நாடில் கல்ல கூட்டதுக்கும் கூடி கொடுக்கும் கூட்டதுக்கும் உங்களை பிடிக்காது இதுதான் உண்மை

    ReplyDelete
  5. Yahapalanya Joker can only talk like this.

    ReplyDelete

Powered by Blogger.