Header Ads



வெளிநாட்டுத் தபால், கட்டணங்கள் அதிகரிப்பு

அடுத்த வருடத்துக்கான வெளிநாட்டுத் தபால் கட்டணங்கள் அதிகரிப்பானது நாளை முதல் (1) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதுதொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 5 ரூபாவினால் வெளிநாட்டு தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாகவும், விமானப் பொதிகளுக்கான கட்டணங்கள் குறித்த நாடுகளுக்கு அமைய மாறுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு தபால் கட்டண அதிகரிப்பானது ஒவ்வொரு வருடமும் மேற்கொள்ளப்படும் நிலையில், இறுதியாக 2011ஆம் ஆண்டே தபாற் கட்டண திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் பெப்ரவி மாதம் முதலாந் திகதியிலிருந்து உள்நாட்டு தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக ​தபால் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.