காட்டூன் நிகழ்ச்சி கதாபாத்திரம் போல, தன்னை மாற்றமுயன்ற சிறுவன் மரணம்
குழந்தைகள் காட்டூன் நிகழ்ச்சியில் இருக்கும் கதாபாத்திரம் போல் தன்னை மாற்றிக்கொள்ள முற்பட்ட சிறுவனொருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று ஶ்ரீ புர , ஜயந்திவெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
9 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரின் தாயின் ஆடைகளை அணிந்து கொண்டு சிறிய மரமொன்றின் கிளையில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் தொங்க முற்பட்ட போது கயிறு கழுத்தில் சிக்கி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது.
Post a Comment