Header Ads



"வரிப்பணத்தில் உருவாகும் கட்டடங்களை, திறந்துவைத்து வாக்கு கேட்க முடியாது"

-விசு கருணாநிதி-
  
இரயில் தண்டவாளத்தில் நடந்து செல்லக்கூடாது என்ற சட்டமும் தேர்தல் சட்டமும் ஒன்று. குற்றமெனத் தெரிந்துகொண்டும் தண்டவாளத்தில் நடப்பார்கள். தேர்தல் சட்ட விதிகள் எனத் தெரிந்திருந்தும் அதனை மீறுவார்கள். இவ்வாறு சட்டத்தினுள் நுழைவதற்கு எவருக்கும் இடமளிக்காதீர்கள் என்று ஊடகவியலாளர்களிடம் கோரிக்ைக விடுத்திருக்கிறார் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய.

"தேர்தலை நீதியாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்கு ஆணைக்குழுவினால் மாத்திரம் இயலாது. வாக்காளர்கள், வேட்பாளர்கள், ஊடகவியலாளர்கள் இணைந்து செயற்பட்டால் மட்டுமே அது சாத்தியமாகும். ஊடகம் என்பது இயற்கை வளத்தைப் போன்று பொதுச்சொத்து. அதனைத் தனிப்பட்ட இலாபங்களுக்காகப் பயன்படுத்த முடியாது. அதுபோல், பொதுச்சொத்துகளைப் பயன்படுத்திப் பொது மக்களைக் கவர்வதற்கும் இடமளிக்க முடியாது. சிலர் 45 நாட்களுக்குள் புண்ணியம் தேட முயற்சிக்கிறார்கள். தானம் செய்வதற்குப் பிரபல்யம் அவசியமில்லை. அந்தத் தானத்தை வழங்குவதற்கு பெப்ரவரி பத்தாந்திகதிக்கு முன்னர் என்ன அவசரம் வேண்டிக்கிடக்கிறது? இதனைக் கேட்டால், தேர்தல்கள் ஆணைக்குழுவைத் திட்டுகிறார்கள். சிலர் என் தாயாரையும் திட்டுகிறார்கள். அவர் இறந்து 60 வருடமாகிவிட்டது. மூன்று வருடமாக நடக்காத தேர்தலுக்கு இப்போது என்ன அவசரம் என்று கேட்கிறார்கள்"

தேர்தல் ஆணைக்குழுவைத் திட்டுவது 'டிப்பி டிப்பி' சாப்பிடுவதற்கு ஒப்பானது. தற்காலிக சுவையைத் தரும் அவ்வளவுதான். அதனால், எந்தப்பயனும் இல்லை, என்று சுட்டிக்காட்டும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, "ஊடகங்களில் சொல்வதை மக்கள் அப்படியே நம்பிவிடுவார்கள். எனவே, ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல் நெறியை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும். சட்டம் ஒருபுறமிருந்தாலும், சுய கட்டுப்பாட்டுடன் செயற்படுவது முக்கியம். தனிப்பட்ட பணத்திலோ அரச செலவிலோ பொருள்கள் வழங்குவது ஏதாவதொன்றை எதிர்பார்த்து அல்லவா, அதற்குப் பிரதியுபகாரம் வாக்காக இருக்கக்கூடாது. மக்களின் வரிப்பணத்தில் நிர்மாணிக்கப்படும் கட்டடங்களைத் திறந்து வைத்துவிட்டு வாக்கு கேட்க முடியாது. இதற்கு ஊடகங்கள் பிரசாரம் வழங்கக்கூடாது. அரச, தனியார் துறை ஊடகங்களுக்குப் பொதுவாகவே வழிகாட்டல் நெறி வழங்கப்பட்டிருக்கிறது. இதுபற்றிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பக்கச் சார்பாக செயற்படும் ஊடகங்கள் தாம் எந்தக் கட்சியின் ஆதரவாளர் என்பதை அறிவித்துவிட்டுப் பிரசாரம் செய்யலாம். உண்மையைக் கூறுவதில் நாங்கள்தான் முதன்மையானவர்கள், விருது பெற்றிருக்கின்றோம், இரண்டாவது விருதுக்கும் முயற்சிக்கின்றோம் என்று மார் தட்டுபவர்கள் அவ்வாறே நடந்துகொள்ள வேண்டும்! அதுதான் ஊடக தர்மம்" என்கிறார் அவர். உண்மையில் இந்தத் தேர்தல் முறையானது 47 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் ஒன்றாகும். 1970 இற்குப் பின்னர் தொகுதிவாரியாக நடைபெற்றாலும், விகிதாசார விருப்பு வாக்கு முறைமை இல்லாமல், வட்டாரத்திற்கு ஓர் உறுப்பினரை அனுப்பக்கூடிய கலப்பு முறையில் நடைபெறுவது இலங்கை மக்களுக்கு இது புதிய அனுபவமாகும். அரசியலமைப்பின் பத்தொன்பதாம் திருத்தச் சட்டத்தின் ஊடாக அமைக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தும் முதலாவது தேர்தல். பெண்களுக்குக் கூடுதல் வாய்ப்புகளை வழங்கும் ஒரு தேர்தல். அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தமது செல்வாக்ைக உரசிப் பார்க்கும் ஒரு தேர்தல். மொத்தத்தில் பெரும்பான்மைக் கட்சிகளுக்கும் சிறுபான்மைக் கட்சிகளுக்கும் பலப்பரீட்சையான ஒரு நிலவரத்தை ஏற்படுத்தியிருக்கும் தேர்தல். எனவே, ஊடகங்கள் மிக மிகப் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்பது ஆணைக்குழுவின் தலைவருடைய கோரிக்ைக. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடைய கோரிக்ைக.

2 comments:

  1. இந்த செய்தி (தலைப்பு) றிசாத் போன்றவர்களுக்கு நல்ல அடி தான்

    ReplyDelete
  2. Ajan please dont make people crazy.
    Dont mension anybody in your comment.
    It will brake our dicipline.pls avoi kind of things

    ReplyDelete

Powered by Blogger.