Header Ads



“சிறிலங்கா தேயிலை "ஒரு எரிமலைக் குழம்பு" - ரஷ்யா

சிறிலங்கா தேயிலை இறக்குமதிக்கு ரஷ்யா விதித்த தடைக்கும், அஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளுக்கு சிறிலங்கா விதித்த தடைக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதுவர் யூரி பி மரேரி தெரிவித்துள்ளார்.

“சிறிலங்காவின் தேயிலைப் பொதியில் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு கப்ரா வண்டு அல்ல. அது ஒரு எரிமலைக் குழம்பு.

சிறிலங்கா தேயிலைக்கு தற்காலிக தடையை விதித்தமைக்குக் காரணம், எமது நாட்டின் கோதுமை உள்ளிட்ட விவசாய உற்பத்திகளைப் பாதுகாக்கவேயாகும்.

அண்மையில் மொஸ்கோவுக்கு பயணம் மேற்கொண்ட சிறிலங்கா அரச குழு, இதுபோன்று மீண்டும் நிகழாது என்று வழங்கிய வாக்குறுதியை அடுத்து, தேயிலை இறக்குமதிக்கான தடையை ரஷ்யா நீக்கியுள்ளது.

சிறிலங்கா வெள்ளை அஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளையே பயன்படுத்துகிறது. இது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கக் கூடிய ஆபத்தானது அல்ல. அமெரிக்கா, கனடா, சீனா, இந்தியா, பிரேசில், ரஷ்யா உள்ளிட்ட 140 நாடுகளில் இது பயன்பாட்டில் உள்ளது.

ரஷ்யாவின் தடையினால்,  சிறிலங்கா தேயிலை தொழில்துறைக்கு பாதிப்பு ஏற்படாது. கப்பலில் ஏற்றப்பட்ட சிறிலங்கா தேயிலையை ரஷ்ய துறைமுகங்களுக்கு விநியோகிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாடுகளும் நீண்டகால நட்புறவைக் கொண்டுள்ளதால், எந்தவொரு சிறிய அல்லது பெரிய பிரச்சினையாக இருந்தாலும், பேச்சுக்கள் மூலம் தீர்க்க முடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.