மறைமுகமாக ஊழலில் ஈடுபடுமாறு, மகிந்த தெரிவித்தார் - மைத்திரிபால
எதிர்வரும் தேர்தலின் மூலம் தெரிவாகும் புதிய உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்களுக்கு ஊழல் மற்றும் மோசடியில் ஈடுப்பட ஒரு போதும் இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை – சிறிபுர பிரதேசத்தில் இன்று -31- இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
அவ்வாறு ஊழல்களில் ஈடுப்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
உள்ளுராட்சி மன்றங்களில் தலைமை பொறுப்பை வகித்த நூற்றில் 50 சதவீதமானவர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் போட்டியிட முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
அதற்கு காரணம் கடந்த காலங்களில் பாரிய அளவிலான ஊழல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டமை என அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2014ஆம் ஆண்டு, பதவி வகித்த ஜனாதிபதியிடம், தற்போது நாட்டில் உள்ள பல உள்ளுராட்சி மன்றங்களிலும் பாரிய அளவில் ஊழல் இடம்பெறுவதாக தெரிவித்து அதற்கு காரணமானவர்களை சந்தித்து கலந்துரையாடுமாறு கோரினேன்.
அதற்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார்.
இதன்போது, குறித்த சந்திப்பில் உரையாற்றிய தாம், ஊழல் நாட்டிற்கும் கட்சிற்கும் ஆரோக்கியமாது அல்லவென, 40 நிமிடங்கள் அவர்களுக்கு எடுத்துரைத்ததாக குறிப்பிட்டார்.
இருப்பினும் அதன் பின் உரையாற்றிய அப்போதைய ஜனாதிபதி, செய்வதை எவருக்கும் தெரியாத வண்ணம் செய்யுமாறு மிக குறைந்த நேரம் உரையாற்றி அந்த சந்திப்பை நிறைவு செய்ததாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
ஏற்கனவே ஊழல் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கி கிழித்து விட்டார்... இப்போது புதிதாக ஊழல் செய்பவர்களுக்கு தண்டனை வழங்க போகிறார்...
ReplyDelete