Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஊடுறுவல் அதிகரித்துள்ளது, கட்டுப்படுத்த வேண்டும் என்கிறான் கருணா

எப்படிப்பட்டவராக இருந்தாலும், தேர்தலில் இறங்கினால் வெல்வோம் என்ற இறுமாப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கின்றது, கூட்டமைப்பின் இறுமாப்புக்கு விரைவில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

களுதாவளையில் அமைக்கப்பட்டுவரும் பொருளாதார மத்திய நிலையத்தில் வியாபார நடவடிக்கைகளுக்காக 25 வீதத்தினை முஸ்லிம் வர்த்தகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற உடன்படிக்கை ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் களுதாவளை மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும்.

பட்டிருப்பு தொகுதி மக்கள் நிச்சயமாக சிந்தித்துத்தான் இம்முறை வாக்களிப்பார்கள், நான் பட்டிருப்புத் தொகுதியில் மிகவும் கடுமையான கவனம் செலுத்தியுள்ளேன்.

முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஊடுறுவல் இன்று அதிகரித்துள்ளது, இதனை மிகவும் விரைந்து கட்டுப்படுத்த வேண்டும்.

பட்டிருப்பு தொகுதியில் நாடாளுமன்ற பிரதிநித்துவம் அற்ற நிலையில் அத்தொகுதி அநாதையாக்கப்பட்டுள்ளது, இதனால் இன்று ஐக்கிய தேசிய கட்சி பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் கணேசமூர்த்தி ஒரு தவறான வேலையை செய்துள்ளார்.

எப்படிப்பட்டவராக இருந்தாலும் தேர்தலில் இறக்கினால் வெல்வோம் என்ற இறுமாப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது.

அதனால் தராதரம் இன்றி தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது, இம்முறை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுமாப்புக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

அவர்களுக்கு இந்த நற்பாசை தொடர்ச்சியாக இருந்து வருகின்றது.

மட்டக்களப்பு தொகுதியில் ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவிற்கு பின்னர் ஒரு நிலையான தலைமைத்துவம் இன்னமும் உருவாக்கப்படவில்லை.

இதனை உருவாக்க வேண்டும், அவர் ஒரு மாமனிதன், சிறந்த அரசியல்வாதி, சதிமுயற்சியால் படுகொலை செய்யப்பட்டுள்ளார், இதனை மேற்கொண்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும், புத்திஜீவிகளை கொலை செய்வது முட்டாள்களின் வேலையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. அரசியலுக்காக தாயோடும் விபச்சாரம்கொள்ள தயங்காத கேவலமான பொருக்கி இவன்.

    ReplyDelete
    Replies
    1. He is true, muslim will conduct watever you said in order to establish their business or to sell their religion by giving offers to poor ppl

      Delete
    2. @ சந்தர்"பால்" உம் பெயரைவைத்தே சொல்லலாம் உமக்கு எவ்வளவு மதிப்பு உயர்சாதி தமிழர்களிடம் கிடைக்கும் என்று.
      பொறாமை கொள்வது உடலுக்கு நல்லதல்ல தெரியுமோ?

      Delete
  2. கட்டுப்படுத்த தங்களுக்கு சொல்லி தர தேவை இல்லையே. பழைய விளையாட்ட காட்ட வேண்டியதுதானே.தமிழீழ கனவை கலைத்த உத்தமர்.

    ReplyDelete
  3. உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா
    ஏனெனில் அரசியலில்என்ன பேசவேண்டும் என்பது உனக்குத் தெரியாது

    ReplyDelete

Powered by Blogger.