அக்கரைபற்றை கைப்பற்றப் போவது யார்..?
-A.G.நிப்தாஸ் அஹமெட்-
உள்ளூராட்சி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அக்கரைப்பற்றின் அரசியல் களம் சூடு பிடித்தே காணப்படுகின்றது.
அந்தளவுக்கு ஏட்டிக்குப்போட்டியான தேர்தல் பரப்புரைக்கூட்டங்கள் அக்கரைப்பற்றில் நடந்தவண்ணம்முள்ளன.
இம்முறை ஐ.தே.க. கூட்டு சேர்ந்து மு.கா. கட்சி யானை சின்னத்தில் களம் கண்டிருக்கிறது
அதே போல் அக்கரைபற்றின் நடப்பு சம்பியனாக இருக்கின்ற தே.கா. கட்சி குதிரை சின்னத்தில் களமிறங்கியிருக்கிறது.
தே.கா. கட்சியை பொறுத்தவரை மீண்டும் அக்கரைபற்றின் சம்பியன் நான் தான் என்பதை நிரூபிக்க வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது.
அதே போல் அக்கரைப்பற்று அரசியலில் ஓர் புது வரவாக களத்தில் நுழைந்திருக்கும் கட்சிதான் NFGG கட்சி
இக் கட்சி காத்தான்குடி மண்ணில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு நல்லாட்சிக்கான தேசிய முண்ணணி என்ற பெயரில் அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்பட்டு இரட்டை கொடி சின்னத்தில் களம்மிறங்கியிருக்கிறது.
இம் முறை நடைபெறும் தேர்தல் முறை புதிய தேர்தல் முறையாக காணப்படுவதினாலும், தங்கள் வட்டாரத்திற்க்கான பிரதிநிதியாக சிறந்தவரையே அனுப்பவேண்டும் போன்ற காரணங்களினால் இத் தேர்தலில் மக்கள் பெரும் முனைப்புடன் வாக்களிப்பார்கள் என்பது திண்ணமாகும்.
அந்தந்த வட்டாரத்திலே வாக்கெண்ணும் நிலையம் அமைக்கப்பட்டு வாக்கெண்ணல் நடைபெற இருப்பதால்
வாக்குமோசடி, ஊழல் போன்றவற்றுக்கு இடம்மிருக்காது.
எனவே ஒரு நியாயமானதும் , சுதந்திரமானதும்மான தேர்தலை இம் முறை எதிர் கொள்ளலாம் என்பது என் நம்பிக்கை.
அக்கரைபற்றின் அரசியல் களம் ஒரு மும்முனை போட்டி நிறைந்ததாகவே காணப்படுகின்றது.
பார்க்கலாம் அக்கரைப்பற்றின் உள்ளூராட்சி அரசியல் அதிகாரம் யார் கையில் கிடைக்கபோகின்றது? , அக்கரைப்பற்றின் அதிகபடியான மக்கள் ஆணையை எக்கட்சி பெறப்போகின்றது? போன்ற வினாக்களுக்கான விடைகள் பெப்ரவரி 11ம் திகதி கிடைக்கும் இறைவன் நாடினால்.
Post a Comment