Header Ads



இனவாதமும், மதவாதமும் நாட்டில் தொற்று நோயாக மாறியுள்ளது - விக்ரமபாகு

இனவாதமும் மதவாதமும் நாட்டில் தொற்று நோயாக மாறியுள்ளதாகவும் இதன் ஊடாக நாட்டை ஏகாதிபத்தியவாதிகளுக்கு காட்டிக்கொடுக்கப்படுவதாகவும் நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இனவாத குற்றங்கள் நடக்கும் போது ஏகாதிபத்தியவாதிகள் எம்மை அடக்கியாள சந்தர்ப்பம் கிடைக்கும். எம்மீது தடைகளை விதிக்க இடமளிப்பதே இனவாதமும் மதவாதமுமாகும். இனவாதம் மதவாதங்களை பரப்பும் போது எவருடைய உதவிகளையும் எம்மால் பெற்றுக்கொள்ள முடியாது. எமது சமூகம் அழிந்து போகும்.

இனவாத, மதவாத கருத்துக்களை உடைத்தெறிந்து நியாயமான ஜனநாயக அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை உருவாக்க போராட்டத்தை ஆரம்பிப்போம் எனவும் விக்ரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன்பு பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழன் என்ற காரணத்தால் பாரபட்சம் காட்டப்பட்டதை உணர்ந்த இந்த பேராசிரியர் தனிப்பட்ட முறையில் அந்த விடயத்தில் தலையிட்டு அந்த மாணவனின் உரிமையைச் சரியாகப் பெற்றுக் கொடுத்தார் என இன்று பட்டயக்கணக்காளராகப் பணிபுரியும் அவர் என்னிடம் கூறினார். இந்த பேராசிரியருக்கு அல்லாஹ் அருள்பாலிக்க வேண்டும். ஒரு மனிதனுக்கு அநீதி இழைக்கப்படும்போது அங்கே இனம்,மதம்,சாதி வேறுபாடு இன்றி உதவி செய்பவர்.

    ReplyDelete
  2. (நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.”
    (அல்குர்ஆன் : 7:158)

    ReplyDelete

Powered by Blogger.