ஜெரூசலேம் பற்றி பேசுகின்றவர்கள், பௌத்த சின்னங்கள் அழிவது பற்றி பேசுவதில்லை
ஜெரூசலேம் பற்றி பேசுகின்ற அரசியல் தலைவர்கள் பௌத்த வரலாற்று சின்னங்கள் அழிவது பற்றி பேசுவதில்லை என்று ராவண பலய அமைப்பின் இணைப்பாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இதன் போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
அமைச்சர் மனோ கணேசன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் நல்லிணக்க செயற்பாடுகளின் மூலம் சிங்களவர்களும், பௌத்தர்களும் மட்டுமே பாதிக்கப்பட்டுவருவதாக கூறியுள்ளார்.
இதேவேளை, திருகோணமலை சம்பூர் பகுதியில் வரலாற்று சின்னங்களை உடைத்து அழிப்பதற்கு ஊக்கம் கொடுத்த அரசியல்வாதிகளைதான் முதலில் கைதுசெய்ய வேண்டும் என்றும் ராவண பலய அமைப்பின் இணைப்பாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
Post a Comment