Header Ads



கவலைப்படுகிறார் விமல் வீரவன்ச

தனது அரசியல் கட்சியில் இருந்து பெரியவர்களோ, சிறியவர்களோ, எவர் விலகிச் சென்றாலும் கவலை ஏற்படும் எனவும் இதனை அறியாத அளவுக்கு அரசியல் குஷ்டநோய் நிலைமையில் தமது கட்சி இல்லை எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -28- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க அண்மையில் தேசிய சுதந்திர முன்னணியில் இருந்து விலகி ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொண்டதால், கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே வீரவங்ச இதனை கூறியுள்ளார்.

தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் சிறந்த விலை கிடைத்ததும் சில தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.

எதிர்காலத்தில் மேலும் சிலர் கட்சியில் இருந்து விலகிச் செல்ல வாய்ப்புள்ளது எனவும் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டில் மிகப் பெரிய பசளை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது 2, 500 ரூபாவுக்கும் கூட பசளை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் கப்பல் வரும் என காத்திருந்தது போல், பசளை கப்பல் வரும் வரை விவசாயிகள் காத்திருக்க வேண்டியுள்ளது எனவும் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. பணத்திற்கு விலை போன தலைமை யிடம் காற்று கொண்ட பாடம் தானே

    ReplyDelete

Powered by Blogger.