இஸ்லாமியர்கள் பதற்றங்கொள்ளத் தேவையில்லை - வழக்கறிஞர் திலகர்
தொடர் பணிகளால் ... இரண்டு நாட்களாகப் பதிவுகள் எழுத நேரமில்லை ...
இருப்பினும் ... தலாக் பற்றி பலரும் இன்பாக்ஸில் கேட்பதால் ...
சுருக்கமாகச் சில வார்த்தைகள் ...
ஏற்கனவே ... உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட ... இந்த இன்ஸ்டன்ட் ட்ரிபிள் தலாக்கைத் ... தூசி தட்டி ... மறுபடியும் பாராளுமன்றத்தின் நேரத்தை வீணடித்துள்ள ... மோடி வகையறாக்களுக்கு ,எனது கடும் கன்டனங்கள்.
உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்பே ... ஒரு சட்டம்தான் (Judge Made Laws) ஆகவே ... ஏற்கனவே உள்ள சட்டத்தை மறுபடியும் புதிதாகச் செய்வது போல் ...
120 கோடி மக்களின் நேரத்தை வீணடிப்பது ஓர் வரலாற்றுப் பிழை ...
மேலும் ... விவாகரத்து வழக்குகளைப் பொறுத்தவரை ... இந்த தேசத்தில் மிக அதிகம் துன்பப்படுவது இந்துப் பெண்களே ... இஸ்லாமியப் பெண்கள் அல்ல ... ஒரு விவாகரத்து HMOP வழக்கு மெயின் சூட் எத்தனை ஆண்டுகள் நடைபெறும் என்றும் ... பாதிக்கப்பட்ட இந்துப் பெண் தனது வாழ்விற்காக போடும் Maintenance Petition ஐ I/A வின் மீது I/A வாக எத்தனை வழக்குகள் ஓடும் என்றும் ... அந்த I/A விலேயே எத்தனை அப்பீல் மனுக்கள் ஓடும் என்றும் ... பலருக்கும் தெரியாது ...
நீதிமன்ற நடைமுறையே தெரியாமல் பலரும், தலாக்கை எதிர்த்து பதிவுகள் இடுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகின்றது ... இத்தனை இடைக்கால I/A மனுக்களால் பெண்தரப்பு சொல்லொண்ணாத் துயரத்தில் ஆழ்ந்து விடும் ... பல பெண்கள் திக்குத் திசையற்று சிதறி விடுவார்கள் ...
இத்தனை துன்பங்களை நிர்க்கதியாக, இந்துப் பெண்கள் அனுபவித்துக் கொண்டிருப்பதை எல்லா நீதிமன்ற வாசல்களிலும் அனைவரும் காண இயலும் ...
நிற்க ...
பாஜகவின் இந்த தலாக் சட்டமுன்வடிவால் ... எந்த இஸ்லாமிய பெண்ணும் தன் கணவன் மேல் போலீசில் புகார் அளிக்கப் போவதில்லை (அரிதிலும் அரிதாக ஒரு சிலரைத் தவிர) ...
ஆகவே ... இஸ்லாமிய சகோதரர்கள் பதற்றங் கொள்ளத் தேவையில்லை ... மற்றபடி ... மோடி வகையறாக்களைப் பொறுத்தவரை... இந்துக்களோ,இஸ்லாமியர்களோ, ...அதைப் பற்றிக் கவலையில்லை... கார்ப்ரேட் நலன் மட்டுமே முக்கியம் ...
நெடுவாசலிலும்,தஞ்சாவூரிலும் இருப்பது என்ன அரபு ஷேக்குகளா ...
எல்லாம் குப்பன்,சுப்பன்,முருகன்,கந்தன்தானே நெடுவாசலில் உள்ளார்கள் ...😃
புரிகின்றதல்லவா ...
ஹா ஹா ஹா ...
இனிய வணக்கம்
தோழமையுடன்
வழக்கறிஞர் திலகர்
Post a Comment