மஹிந்தவுடன் இணைந்திருந்தால் தமிழ், முஸ்லிம் மக்கள் எம்முடன் இணைந்திருக்க மாட்டார்கள்
ஒருவேளை நாங்கள் மஹிந்த தலைமையிலான கூட்டு எதிரணியுடன் இணைந்திருந்தால் இவ்வாறு தமிழ், முஸ்லிம் மக்கள் அதிகளவில் எம்முடன் இணைந்திருக்க மாட்டார்கள் என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அரசியல் மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பது தொடர்பில் விபரிக்கும்போதே டிலான் பெரேரா மேற்கண்டவாறு கோரினார். அவர் இதுதொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்;
சிறிலங்கா சுதந்திரக்கட்சி மிகவும் வெற்றிகரமான முறையில் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கின்றது. தற்போது தமிழ், முஸ்லிம் மக்கள் சுதந்திரக்கட்சியுடன் அதிகளவு இணைந்து வருவதுடன் எமக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இனவாதக் கட்சிகளுடன் கூட்டு சேராமையின் காரணமாகவே இவ்வாறு தமிழ், மற்றும் முஸ்லிம் மக்கள் எம்முடன் இணைந்து வருகின்றனர். குறிப்பாக இனவாதிகள் குவிந்து கிடக்கின்ற கூட்டு எதிரணியுடன் இணைந்துகொள்ளவில்லை என்ற காரணத்தினாலேயே தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எம்முடன் கைகோர்த்திருக்கின்றனர்.
நாங்கள் ஒருவேளை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியுடன் இணைந்திருந்தால் தமிழ், மற்றும் முஸ்லிம் மக்கள் எம்முடன் கைகோர்த்திருக்கமாட்டார்கள் என்றே நம்புகின்றோம். தற்போதைய நிலைமையில் ஐக்கிய தேசியக்கட்சியை விட சுதந்திரக்கட்சியுடனேயே தமிழ் முஸ்லிம் மக்கள் அதிகளவு இணைந்துவருவதை காண முடிகின்றது. அந்தவகையில் நாங்கள் தமிழ், முஸ்லிம் மக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுடனும் இணைந்து வெற்றிவாகை சூடுவோம்.
இதேவேளை தேர்தலின் பின்னர் நாங்கள் எந்தக்கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைப்போம் என்று இப்போது கூற முடியாது. காரணம் தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பதை தற்போது எதிர்வு கூறுவது கடினமாகும். நாங்கள் அதிகமான சபைகளை கைப்பற்றுவோம் என்பது உறுதியாக இருக்கிறது.
ஆனால் எவ்வாறான வீதத்தில் முடிவுகள் அமையும் என்று கூற முடியாது. அதனால் நாங்கள் தேர்தலின் பின்னர் ஐ.தே.க.வுடனா அல்லது கூட்டு எதிரணியுடனா இணைந்து ஆட்சி அமைப்போம் என்பதை எதிர்வுகூற முடியாது. எவ்வாறெனினும் நாங்கள் அதிகமான சபைகளில் ஆட்சி அமைப்போம் என்பதை உறுதியாக தெரிவிக்கின்றோம் என்றார்.
Really mental case.
ReplyDeleteHe so jelloyus with Unp.
Ranil has newer giving any power for you.