தடுமாறிப் போன வட்ஸ்ஆப் முடங்கியது
புத்தாண்டையொட்டி இரவில் மக்கள் ஒருவருக்கொருவர் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றின் மூலமும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். வாழ்த்துகள் வந்து குவிந்ததால் வாட்ஸ் ஆப் தடுமாறிப் போனது. சிறிது நேரம் அந்தச் செயலி முடங்கிப் போனது. இதனால் அத்தியாவசிய தகவல்கள் அனுப்ப வேண்டியவர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டது.
வாட்ஸ் ஆப் முடங்கியது பற்றி ஏராளமானவர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டனர். சிறிது நேரத்திற்குப்பின் வாட்ஸ் ஆப் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
Post a Comment