தேசிய அரசாங்கத்தின் காலம், இன்றுடன் நிறைவு
தேசிய அரசாங்கத்தின் காலம் இன்றுடன் நிறைவுக்கு வரும் நிலையில், எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
“ செப்டம்பர் மாதமே தேசிய ஒப்பந்தத்தின் காலம் நிறைவடைந்தது.எனினும் ஜனாதிபதியின் கோரிக்கைக்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் முடிவுகளுக்கு அமைய இந்த ஒப்பந்தத்தின் காலம் நீடிக்கப்பட்டது. இது தொடர்பில் இந்தத் தேர்தல் காலத்தில் நாம் முடிவு எடுக்கப் போவதில்லை மாறாக தேர்தல் நிறைவடைந்த பின்னர் முடிவுகள் எடுக்கப்படுமென” ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேம்ஜயந் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார,
“ தற்போதைய அரசாங்கம் எடுத்த பல முடிவுகளுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தடையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி பல வருடங்கள் தேசிய அரசாங்கத்தின் கீழ் செயற்பட வேண்டுமெனின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்“ எனத் தெரிவித்துள்ளார்.
Post a Comment