நமது பிள்ளைகளை பாதுகாப்போம், இவ்வருடத்தில் 8,548 சிறுவர் துஷ்பிரயோககங்கள்
இந்த வருடத்தில் 8 ஆயிரத்து 548 சிறுவர் துஷ்பிரயோகம் குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இவற்றில் அதிகபடியாக சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து 2 ஆயிரத்து 37 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களை கல்விகற்குமாறு வற்புறுத்துவது குறித்து ஆயிரத்து 298 முறைப்பாடுகளும், பாலியல் துர் நடத்தைகளுக்கு உட்படுத்திய 481 முறைப்பாடுகளும், கடுமையான பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்திய 284 முறைப்பாடுகளும், 18 வயதுக்கு குறைவான சிறுமிகள் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட 322 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
இதேவேளை, குழந்தை மற்றும் சிறுவர் கட்டளைச்சட்டத்தின் கீழ் 358 குழந்தைகள் புறக்கணிப்பு முறைப்பாடுகளும், 246 சிறுவர் தொழிலாளர்கள் குறித்த முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
இந்த முறைப்பாடுகளில் அதிகபடியாக, கொழும்பு மாவட்டத்தில் ஆயிரத்து 232 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் 177 முறைப்பாடுகளும், வவுனியா மாவட்டத்தில் 122 முறைப்பாடுகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 170 முறைப்பாடுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 125 முறைபாடுகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 117 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் 925 முறைப்பாடுகளும், களுத்துறை மாவட்டத்தில் 550 முறைப்பாடுகளும், காலி மாவட்டத்தில் 647 முறைப்பாடுகளும், குருணாகல் மாவட்டத்தில் 564 முறைப்பாடுகளும், இரத்தினபுரியில் 490 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
Post a Comment