500 மில்லியன் நஷ்டடு, கேட்கும் நஸீர் அஹமட்
கிழக்கு மாகாண முன்முனாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவமதிக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டில் ஏறாவூர் 2 ஆம் குறிச்சி,299,ஜி.எஸ்.வீதியைச் சேர்ந்த முஹம்மத் நஸீர் என்பவரிடம் 500 மில்லியன் ரூபா நஷ்டடு கோரப்பட்டுள்ளது. குறித்த தொகையை வழங்கத் தவறின் வழக்குத் தொடரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஹம்மத் நஸீர் என்பவர் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீரை தனது முகநூலில் அவமானப்படுத்தும் வகையில் பதிவு ஒன்றை இட்டமை தொடர்பிலேயே இந்த நஷ்டஈடு கோரப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு நஷ்டஈட்டுக் கோரிக்கையை முன்வைத்து ஹாபிஸ் நஸீர் அஹமத் வழக்கு ஒன்றைத் தொடர்வாரானால் அது அரசியல் ரீதியிலும் பல முக்கிய புள்ளிகளைச் சிக்கலுக்குள் உட்படுத்தும் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை.
ஹாபிஸ் நஸீரினால் இதற்கு முன்னரும் பல வழக்குகள் தொடரப்பட்டமை, அதனால் கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரதிபலிப்புகள் தொடர்பில் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அவர் பதவிக்கு வந்தமுறை பற்றி யாராவது வழக்குப் போட்டால் அதைவிட பலமடங்கு நஷ்டஈடு கோரலாம். நாடு முழுவதற்கும் சனாதிபதியாகத்தான் அவர் ஆட்சி நடாத்தினார். அந்தவகையில் எந்த உ ருப்படியான வேலைக்கு அல்லது அவருடைய வேலையின் பெறுமதிக்கு அந்தப்பணம் என்று கேட்டால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteஏன் இவ்வளவு குறைவான பணம்? உங்கட தன்மாத்திற்கு எவ்வளவு கோடி கொடுத்தாலும் ஈடாகாது... புனித அல் குரானை மனனம் செய்தவர் செய்யக் கூடிய காரியங்களையா இவர் செய்துள்ளார்? அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்...
ReplyDelete