Header Ads



தகனம்செய்ய பணம் இல்லை - தங்கையின் சடலத்துடன் 3 நாட்களாக வாழ்ந்த மருத்துவர்


இறந்து விட்ட தங்கை உடலை தகனம் செய்யப் பணம் இல்லாத காரணத்தால், சடலத்துடன் மூன்று நாட்களாக மருத்துவர் ஒருவர் வாழ்ந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சதுக்கு வந்துள்ளது.   

மேற்கு வங்க மாநிலம் ஹௌரா மாவட்டத்தில் உள்ளது உலுபேரியா என்னும் ஊர். இங்கு வசித்து வருபவர். நில்மணி தாரா(70). உடற்கூறு இயல் மருத்துவர். இவருக்கு கரபி(63) மற்றும் புரபி (62) ஆகிய இரண்டு சகோதரிகள் உள்ளனர். இவர்கள் மூவருக்கும் திருமணம் ஆகவில்லை. மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

தனியார் மருத்துவமனை ஒன்றில் பணி புரிந்து வந்த நில்மணி அக்கல்லூரி நிர்வாகத்துடன் ஏற்பட்ட தகராறின்  காரணமாக, 2006-இல் வேலையை இழந்து விட்டார். அதன் பிறகு குடும்பத்தை நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். ஆனால் அந்த நிலையிலும் அக்கம்பக்கத்தில் யாரிடமும் உதவி கோராமல் அவர்கள் வாழ்ந்து வந்தனர். தங்களுக்கு சொந்தமாக இருந்த சில நிலங்களை விற்று வாழ்க்கையினை நடத்தி வந்தனர். அதேசமயம் யாரிடமும் அதிகமாக அவர்கள் பழகுவதும் இல்லை.

இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கரபி கடந்த 24-ஆம் தேதி அன்று உலுபேரியா துணை மண்டல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனன்றி அவர் அன்று இரவே மரணமடைந்து விட்டார். ஆனால் தங்கை உடலை தகனம் செய்யப் பணம் இல்லாத காரணத்தால், நில்மணி தங்கையின் உடலுடன் டிசம்பர் 25-ஆம் தேதி அன்று காலை வீடு திரும்பி விட்டார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தகனத்திற்கு உதவி செய்ய முன்வந்த போதும் அவர் யாரிடமும் எந்த உதவியும் பெற்றுக் கொள்ளாமல், பிணத்தினை வீட்டுக்குள் எடுத்துச் சென்று விட்டார். அந்த வீட்டின் இன்னொரு அறையில் அவரது மற்றொரு தங்கை புரபி படுத்த படுக்கையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியில் அந்த வீடடில் இருந்து எழும்பிய துர்நாற்றத்தினை பொறுக்க முடியாத அக்கம்பக்கத்தினர் புதனன்று  உடனடியாக போலிசுக்கு தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த போலீசாரை, நில்மணி முதலில் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.பின்னர் மற்றவர்கள் பேசியதற்குப் பிறகு அனுமதித்துளார். இறுதியில் கரபியின் உடலை  போலீசார் கைப்பற்றி, அவர்களது சொந்த செலவிலேயே தகனம் செய்தனர்.

இந்த சம்பவமானது அந்தப் பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

No comments

Powered by Blogger.