தேர்தலில் போட்டியிடும் 32 குற்றவாளிகள்
நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 32 பேர் தண்டனைக்குரிய குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
தேர்தல் நடைமுறைகளைக் கண்காணிக்கும் சுயேச்சைக் குழுவொன்றின் ஆய்வொன்றிலேயே இது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, குறித்த வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் மேற்படி கண்காணிப்புக் குழு கையளித்துள்ளது.
கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம், நிதி மோசடி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களில் மேற்படி வேட்பாளர்கள் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
தேர்தல் சமயத்தில் இவர்கள் குறித்து கடும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என பொலிஸாரிடம் ‘பஃப்ரல்’ அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் குற்றவாளிகள் பலரை வேட்பாளராக நியமித்திருப்பதாக பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
Post a Comment