Header Ads



தேர்தலை இலக்காக கொண்டு 2 யுவதிகள் கைது

தேர்தலை இலக்காக கொண்டு அநுராதபுரம் மாநகர சபையில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சார்பில் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச புத்தகங்களை விநியோகித்த இரண்டு யுவதிகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அநுராதபுரம் காவல்துறை தேர்தல் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு யுவதிகளும் குறித்த வேட்பாளரின் கீழ் பணி புரிவதுடன், அவர்கள் நாளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

No comments

Powered by Blogger.