வீதி விபத்துகளில், இவ்வருடம் 2816 பேர் பலி
இந்த வருடத்தின் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் பெரும்பாலானவை உந்துருளி விபத்துக்கள் என தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டி மற்றும் கார்களினால் நிகழ்ந்த மரணங்கள் இந்த வருடம் குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துக்களால் 2 ஆயிரத்து 816 பேர் பலியாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment