10 வருடங்களுக்குப் பிறகு அப்பம், உண்ட மரணத் தண்டனைக் கைதிகள்
-ஆர்.மகேஸ்வரி-
மரணத் தண்டனைக் கைதிகள் 250 பேருக்கு வெலிக்கடை சிறைச்சாலையில் வழமைக்கு மாறாக நல்ல உணவுகள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று (31) காலை வெளிக்கடை சிறைச்சாலையில், பௌத்த சமய நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதன்போது மரணத்தண்டனைக் கைதிகள் 250 பேர் உள்ளிட்ட 900 கைதிகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு இன்று காலை உணவாக அப்பம், இடியப்பம், ரொட்டி போன்ற உணவுகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மரணத் தண்டனைக் கைதிகளுக்கும், ஏனைய கைதிகளுக்கும் காலை உணவாக பாண் அல்லது சோறே சிறைச்சாலைகளில் வழங்கப்படுவது வழக்கம் இந்த நிலையில், சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு கைதிகளுக்கு இவ்வாறான உணவுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment