பொலிஸ்மா அதிபரிடம் முறையிடுவோம் - NFGG
காலி-கிந்தோட்டை பகுதிக்கான களவிஜயம்ஒன்றினை நல்லாட்சிக்கான தேசியமுன்னணி(NFGG) பிரதிநிதிகள் நேற்று (26.11.2017)மேற்கொண்டனர். கிந்தோட்டை வன்முறைகளுக்குப்பின்னரான நிலவரங்களை நேரில்கண்டறியுமுகமாகவே இந்த விஜயம்மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 17ம் திகதி மாலை நடந்த வன்முறைகள் நடந்தவேளை ஜெனிவாவில் தங்கியிருந்த NFGGதவிசாளர் அன்றைய தினமே இது தொடர்பாக உரியசர்வதேச சமூகப்பிரதிநிதிகளின் கவனத்திற்குகொண்டு வந்திருந்தார். அத்தோடு , மறுநாள் காலை(18ம் திகதி) NFGGயின் தலைமைத்துவ சபைபிரதிநிதி முஜீப் ரஹ்மான் கிந்தோட்டை பகுதிக்குஉடனடி விஜயம் செய்திருந்ததுடன் ஒருஅறிக்கையினையும் NFGG தலைமைத்துவ சபைக்குசமர்ப்பித்திருந்தார். இந்தப் பின்னணியிலேயேஇன்றைய விஜயம் மேற்கொள்ளப்பட்டது. இதில், NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான், அதன் தேசிய அமைப்பாளர் MBMபிர்தௌஸ் உள்ளிட்ட NFGG யின் பிரதிநிதிகள்பலரும் கலந்து கொண்டனர்.
கிந்தோட்டை கலவரத்தின் பின்னர் விடயங்களைகையாள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேடகுழுவினரை சந்தித்த NFGG பிரதிநிதிகள்தற்போதைய நிலவரங்கள் பற்றி விரிவாககலந்துரையாடினர். நடந்து முடிந்த வன்முறைகள்தொடர்பான மதிப்பீடுகளைச் செய்வதற்காகஅப்பிரதேசத்திற்கு வருகை தந்திருந்த VOICESஅமைப்பின் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில்கலந்து கொண்டனர்.
பொலிஸ் முறைப்பாடுகள் அதனோடு தொடர்புபட்டசட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாகபேசப்பட்டது. அத்தோடு சேத விபரங்களைஆவணப்படுத்தல் மற்றும் உரிய அரசியல்நிர்வாகிகளிடம் அறிக்கையிடுதல் என்பனதொடர்பாகவும் ஆராயப்பட்டது. அளுத்கமவன்முறைகளைத் தொடர்ந்து NFGG யினால்வெளியிடப்பட்ட முழுமையான அறிக்கை போன்றஒன்று கிந்தோட்டை விடயத்திலும் அவசியம்என்பதனை NFGG பிரதிநிதிகள் வலியுறுத்தியதுடன்அவ்வாறானதொரு நடவடிக்கைளைமேற்கொள்வதற்கு NFGG தயாராக இருப்பதாகவும்தெரிவித்தனர்.
அது தொடர்பில் தாம் ஏற்கனவே கவனம்செலுத்தியுள்ளதாக தெரிவித்த VOICES அமைப்பினர்அவ்வாறான அறிக்கையினை தயாரிக்கும்பணியினை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும்தெரிவித்தனர். அவர்களின் முயற்சியினைவரவேற்ற NFGG குழுவினர் அதற்காக நன்றியும்தெரிவித்தனர்.
பெரும்பான்மை சமூகத்தோடு முஸ்லிம் சமூகம்பிணைந்து வாழும் இப்பிரதேசத்தில் இனவாதகருத்துக்களை வளர்க்கும் தீய சக்திகளைபுறந்தள்ளி தனிமைப்படுத்தும் வகையில் இரண்டுசமூகங்களையும் மையப்படுத்திய நல்லிணக்கவேலைத்திட்டம் ஒன்றினை ஆரம்பிப்பதன்அவசியத்தையும் NFGG குழுவினர் வலியுறுத்தினர்.
இக்கலந்துரையாடலைத் தொடர்ந்துவன்முறைகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை NFGG பிரதிநிதிகள் நேரில் சென்று பார்வையிட்டதுடன்பாதிக்கப்பட்ட மக்களுடனும் நேரில்கலந்துரையாடினர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பொது மக்கள்,
'பாதுகாப்பிற்குப் பொறுப்பானவர்கள் தமதுகடமைகளை உரிய முறையில் செய்திருந்தால் இந்தஅனர்த்தத்தை தவிர்திருக்கலாம். பாதுகாப்பிற்குபொறுப்பானவர்கள் முன்னிலையில்வன்முறையாளர்கள் மிக சுதந்திரமாக நடமாடியதைநாங்கள் கண்டோம். ஊரடங்குச் சட்டம் அமுலில்இருக்கும் நிலையில்தான் எங்களது சொத்துக்களைகொள்ளையிட்டிருக்கிறார்கள். இதற்குபாதுகாப்பிற்கு பொறுப்பானவர்களே பதில் சொல்லவேண்டும். அரசாங்கமே இதற்கானமுழப்பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்' எனத் தெரிவித்தனர்.
மேலும் கருத்துத் தெரிவித்த ஒரு பிரதேசவாதி 'எமதுவீட்டைத் தாக்கி எமது வீட்டிற்கும் வாகனத்திற்கும்தீமூட்டியவர்களை அடையாளம் கண்டு பொலிஸில்உரிய முறைப்பாடுகளை செய்திருந்த போதிலும்அவரை பொலிஸார் இன்னும் கைது செய்யவில்லை'என்பதையும் சுட்டிக்காட்டினார்.
வன்முறைகளுக்கு காரணமானவர்களை கைதுசெய்வதில் காட்டப்படும் அசமந்தம் தொடர்பில் தா ம்பொலிஸ்மா அதிபரிடம் முறையிடுவோம் என NFGG பாதிக்கப்பட்ட மக்களிடம் உறுதியளித்தது.
இந்தக் கலந்துரையாடலில் விசேட அனர்த்தமுகாமைத்துவ குழு சார்பாக AM. சபீக், MIM.இப்றாஸ், MKM.றஸ்மி, JM.ஹிப்ஸி,MM. றதீப். MAM.பாஸி, அகியோரும் கலந்து கொண்டனர்.
Post a Comment