அலுத்கமயில் கொள்ளை முயற்சி - CCTV வெளியானது
அழுத்கமவில் அமைந்துள்ள சர்வதேச பண பரிமாற்று நிலையம் ஒன்றில் இனந்தெரியாத நபர்களால் பணம் கொள்ளையிட மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் 2.50 அளவில் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
முழுமையாக முகத்தை மூடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த குறித்த நபர்கள் பணத்தினை கொள்ளையிட முயற்சித்த வேளையில் அயவலர்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து மதிலை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் காவல் துறையினர் அவர்களை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment