Header Ads



பயங்கரவாதத்தை கூட்டு முயற்சியுடன் மட்டுமே முறியடிக்க முடியும் - இளவரசர் முகம்மது

பயங்கரவாதத்தை கூட்டு முயற்சியுடன் மட்டுமே முறியடிக்க முடியும் என சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை இஸ்லாமியர்களை கொண்ட 41 நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த 41 நாடுகளின் கூட்டணியால் மட்டுமே மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகும் பயங்கரவாதத்தை வேரறுக்க முடியும் என தெரிவித்துள்ள இளவரசர் சல்மான், கடந்த பல ஆண்டுகளாக நமது நாடுகளில் பயங்கரவாதம் செயல்பட்டு வந்தது. தற்போது அந்த நிலை முடிவுக்கு வரும் காலம் நெருங்கி வந்துள்ளது என்றார்.

சவுதி அரேபியாவின் எதிர்கால அரசராக பொறுப்பேற்கவிருக்கும் இளவரசர் சலமான் பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

தற்போது 31 வயதாகும் இவருக்கு தமது குடும்ப உறுப்பினர்களை போன்று அல்லாமல் ஒரு மனைவியும் 4 குழந்தைகளும் உள்ளனர்.

இருப்பினும் ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பாக இளவரசர் சல்மானின் நடவடிக்கைகளுக்கு அரச குடும்பத்தினரிடையே வேறுபட்ட கருத்து நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. ஈரான், ஹிஸ்புஷைத்தான் போன்ற ஹீயா பயங்கரவாதிகளிலிருந்து ஆரம்பியுங்கள், மத்திய கிழக்கின் முக்கால்வாசி பிரச்சனை தீர்ந்து விடும்.

    ReplyDelete

Powered by Blogger.