கீதாவிற்கு மற்றுமொரு தலையிடி
கீதா குமாரசிங்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளதால், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த போது பெற்றுக்கொண்ட ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் அனைத்தையும் மீண்டும் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியேற்படும் என நாடாளுமன்றத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில், இரண்டு வருடங்களுக்கு மேல் கீதா குமாரசிங்க பெற்றுக்கொண்ட ஊதியம், வீட்டுக்கான வாடகை, தொலைபேசி கட்டணம், அலுவலக கட்டணம் உட்பட பல மில்லியன் ரூபாவை மீண்டும் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் ஊடாக இந்த பணத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீதா குமாரசிங்கவின் பதவியை பறித்து உத்தரவிட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் ஏற்கனவே அதிர்ச்சியடைந்துள்ள கீதா குமாரசிங்கவிற்கு இந்த தகவல் மற்றுமொரு அதிர்ச்சியாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
It's never going to happen. it wil be same on all the MP. Because this will reveal the MP experience to the poor and ingnorance people. And make them stupid in the eyes of this MP'S.
ReplyDeleteits not a problem at all.the joint opposition with other vested groups will go for collection from the people to pay back this.
ReplyDelete