Header Ads



யாரும் ஜேவிபியினருடன், புலிகளை ஒப்பிட முடியாது


போரில் மரணமான புலிகளை நினைவுகூரும் நிகழ்வுகள் வடக்கில் நடத்தப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

“அப்பாவி மக்களை கொலை செய்த புலிகளை நினைவு கூருவதை அனுமதிக்க முடியாது.

புலிகளை நினைவு கூரும் எவரும், போரின் போது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட படுகொலைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும்.

ஜேவிபியினர் இறந்து போன தமது உறுப்பினர்களை நினைவு கூர முடியுமென்றால், புலிகளையும் நினைவு கூர முடியும் என்று, யாரும் ஜேவிபியினருடன் புலிகளை ஒப்பிட முடியாது.

தீவிரவாதக் குழுவை மகிமைப்படுத்த யாருக்கும் இடமளிக்க முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Who ever involved in killing innocent public will come under same tittle. No double stand in this regard.

    ReplyDelete

Powered by Blogger.