நல்லாட்சியின் கோரமுகம் - லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் மீது தடை
லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் சிறிலங்காவில் நேற்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று இந்த இணைத்தளத்தை சிறிலங்காவில் பார்வையிட முடியாத நிலை காணப்பட்டது.
லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தைப் பார்வையிட முடியாமல் முடக்குமாறு சிறிலங்காவில் இணைய சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கு, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள், உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொடர்பாக சில கட்டுரைகளை வெளியிட்ட பின்னரே, இந்த தடை விதிக்கப்பட்டதாக ஒரு செய்தி கூறுகிறது.
எனினும், இந்த இணையத்தளத்தை சிறிலங்காவில் பார்வையிட முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டமைக்கான சரியான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சிறிலங்காவில் லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் சில ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆட்சியின் போது, ஜப்னா முஸ்லிம் இணையம் ஒருவருட காலமாக தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment