ஹாதியாவை மதவெறியர்களிடமிருந்து காப்பது, தமிழனின் கடமையாகும் - வழக்கறிஞர் திலகர்
வீட்டுச் சிறையிலிருந்து வீரப் பெண் ஹதியாவை சற்றுமுன் விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம்.
இஸ்லாம் மதத்தை முறைப்படி ஏற்று அதன் பின் திருமணம் செய்த மலையாளப் பெண் ஹதியாவை வெறும் ஆட்கொணர்வு மனு மூலமாக ஹதியாவின் திருமணத்தை ரத்து செய்து தந்தையுடன் திருப்பி அனுப்பியது கேரள உயர்நீதிமன்றம் , ஒரு திருமணத்தை ஆட் கொணர்வு மனு மூலமாக ரத்து செய்ய இயலாது என நான் அப்போதே கூறியிருந்தேன்.
அதன்படியே இன்று,
உச்ச நீதிமன்றம் கேரள உயர்நீதிமன்றத்தை கடுமையாகக் கண்டித்து,ஹதியாவை வீட்டுச் சிறையிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டது.
மேலும்,
ஹதியா தன் மருத்துவப் படிப்பைச் சேலத்தில் தொடரவும் அனுமதி அளித்து விட்டது.
மதநல்லிணக்கம் போற்றும் தமிழகம் உன்னை வரவேற்கிறது மகளே,
தமிழகம் வரும் ஹதியாவை மதவெறியர்களிடமிருந்து காக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும் ...
உச்சநீதிமன்றத்திற்கு மனம் நிறைந்த நன்றியும்,வாழ்த்தும் ...
உற்சாகமான மாலை வணக்கம்
தோழமையுடன்
வழக்கறிஞர் திலகர்
நன்றி ஐயா, உங்களைப்போன்ற நல்லுள்ளமுள்ளவரை எங்களுக்கென்னய்யா பிரச்னை. வாழ்க தமிழகம்
ReplyDeleteஇதே நிலை ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு நிகழ்ந்திருந்தால் செய்தி வேறுமாதிரி இருந்திருக்கும்.
ReplyDeletewe are people we have to keep humanity
ReplyDeletewe all are people we have to keep humanity
ReplyDelete