நல்லாட்சிக்கு எதிராக ஹர்த்தால்
அம்பாறை, அக்கரைப்பற்று விவசாயிகளுக்குச் சொந்தமான, வட்டமடுப் பிரதேசத்தில் அமைந்துள்ள 1,400 ஏக்கர் விவசாயக் காணிகளில் விவசாயம் செய்வதைத் தடுத்துவரும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக இன்று திங்கட்கிழமை (27) அக்கரைப்பற்றில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
மேற்படி ஹர்தாலுக்கான அழைப்பை வட்டமடு பிரதேசத்தின் நான்கு விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து விடுத்திருந்தன.
மேற்கொள்ளப்பட்டு வரும் ஹர்த்தாலுடன் கடைகள், தனியார் நிறுவனங்கள் என்பன மூடப்பட்டிருந்த அதேவேளை, போக்குவரத்து சேவைக்கு எந்தவித தடங்கலும் ஏற்படாமல் வழமை போன்று இடம்பெற்றது.
வங்கிகள், பாடசாலைகள், அரச திணைக்களினதும் வழமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வட்டமடு விவசாயிகள், தமது காணிகளில் விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு தெரிவித்துக் கடந்த வாரம் முதல் ஆர்ப்பாட்டங்களையும் வீதிமறியல் போராட்டங்களையும் தொடர்ச்சியாக நடத்திவருகின்ற நிலையில், இன்று ஹர்தால் கடையடைப்பையும் மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment