Header Ads



பயங்கரவாதிகளை வீரர்கள் என கூறும் அனைவரும், பயங்கரவாதிகளாக இருக்க வேண்டும்.

இராணுவத்தினர் வடக்கை மீட்டதன் காரணமாகவே அங்கு அரசியலில் ஈடுபட முடிந்துள்ளதாகவும் இதனால், சிவாலிங்கம் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு நினைவு நிகழ்வை நடத்த வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹொட்டலில் இன்று -27- நடைபெற்ற வைபவம் ஒன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அமிர்தலிங்கம் முதல் யோகேஸ்வரன் வரையான தமிழ்த் தலைவர்களை கொன்றவர்கள் சிங்கள மக்களோ இராணுவத்தினரே அல்ல எனவும் விடுதலைப் புலிகள் அமைப்பே அவர்களை கொன்றது என்பதை சிவாலிங்கம் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சிவாலிங்கம், பிரபாகரனை நினைவு கூருவாரேயானால், முப்பது வருட போரில் நாட்டிற்கும் மக்களுக்கும் ஏற்பட்ட சேதங்களுக்கு அவர்கள் பொறுப்புக் கூறவேண்டும்.

தடைசெய்யப்பட்டுள்ள அமைப்பொன்றின் உறுப்பினர்களுக்காக சட்டவிரோதமாக நிகழ்வுகளை ஏற்பாடு செய்வார்களேயானால், அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு.

இப்படியான ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்படுவதால், புதிய நாசிவாதத்திற்கு வழித்திறக்கும்.

பயங்கரவாதிகளை வீரர்கள் என கூறும் அனைவரும் பயங்கரவாதிகளாக இருக்க வேண்டும்.

விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது அப்பாவி நிராயுத பாணிகளான மக்களை நூற்றுக்கணக்கில் வீதிகளில் கொன்ற அமைப்பு என்பதை நினைவு தின நிகழ்வுகளை ஒழுங்கு செய்பவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. இந்த சாமியின் வாய் சரியில்லை.

    ReplyDelete
  2. உணக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் காலம் எப்போது வரும்?

    ReplyDelete
  3. ஒரு இனவாத சிங்கள பயங்கரவாதி, தமிழ்ப் பயங்கரவாதிகளைப்பற்றி பாடம் எடுக்குது.

    ReplyDelete
    Replies
    1. 1000%correct.every recism guys given limited time.until theywill do what ever they like.

      Delete
  4. இவர் என்ன இனவாதியாக இருந்தாலும் இவர் சொல்லும் கருத்து உண்மையானது.தமிழ் பயங்கரவாதி களை நினைவு கூருபவர்கள் மிகப் பெரிய பயங்கரவாதிகள்.

    ReplyDelete

Powered by Blogger.