பிளாஸ்டிக் போத்தல்களை கட்டி, பங்களாதேஷ் வரும் ரோஹின்யர்களின் அபாயமான நடவடிக்கை
மியன்மாரில் ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் நீடிக்கும் நிலையில் பிளாஸ்டிக் போத்தல்களை கட்டிய தெப்பம் மூலம் மேலும் பல ரொஹிங்கிய அகதிகள் நேற்று பங்களாதேஷை அடைந்துள்ளனர்.
50க்கும் அதிகமானோரை ஏற்றிய சிறிய தெப்பம் கரையோர கிராமமான ஷாஹ் பொரிர் ட்விப்பை நோக்கி வந்ததை பங்களாதேஷ் கரையோர காவல் படையினர் அவதானித்துள்ளனர்.
இவ்வாறு 52 அகதிகள் இரு நாடுகளையும் பிரிக்கும் நாப் நதியை கடந்து வந்திருப்பதாக எல்லை காவல் அதிகாரி ஆரிப் இஸ்லாம் குறிப்பிட்டுள்ளார். எனினும் பிளாஸ்டிக் போத்தல்களை கட்டிய தெப்பங்களில் நதியை கடக்க முயற்சிப்பது அபாயமான நடவடிக்கை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மியன்மாரில் இருந்து தப்பிவர முயற்சிக்கும் பலரும் படகுகளுக்கு செலுத்த பணமின்று கரையில் காத்திருக்கும் நிலையில் அவர்கள் இவ்வாறான ஆபத்தான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஓகஸ்ட் பிற்பகுதி தொடக்கம் மியன்மாரில் இருந்து 611,000 பேர் பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.
Post a Comment