சமரசம் பேச, மூவரணி நியமனம்
வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்து உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு தடையை ஏற்படுத்தியுள்ள ஆறு மனுதாரர்களுடன சமரசப் பேச்சுக்களை நடத்த சபாநாயகர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள ஆறு மனுதாரர்களுடனும் பேச்சுக்களை நடத்தி, இந்த மனுக்களை மீளப்பெற வைப்பதற்கே மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் சபாநாயகர் கரு ஜெயசூரிய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் சட்டமா அதிபர், தேர்தல் ஆணையத் தலைவர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
Post a Comment