பாதுகாப்பை தொடருங்கள் - ஜிந்தோட்டையில் வைத்து ரணில் உத்தரவு
காலி, கிந்தோட்டை பிரதேசத்துக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்துள்ளார்.
நேற்று முன்தினம் கிந்தோட்டையில் குழப்பநிலை காரணமாக முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டது.
அத்துடன் இரண்டு பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், பெற்றோல் குண்டு வீச்சுகளும் இதன்போது பயன்படுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இன்று -19- பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பிரதமரின் இந்த விஜயத்தின் போது அமைச்சர்களான வஜிர அபேவர்த்தன, சாகல ரத்நாயக்க ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தற்போது குழப்பநிலை முழுமையாக குறைவடைந்துள்ள போதிலும், அப்பகுதிக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அவ்வாறே வைத்திருக்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணித்துள்ளதாக, சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், மறு அறிவிப்பு வரை அப் பகுதிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை விலக்கிக் கொள்ளவோ தளர்த்தவோ வேண்டாம் எனவும், அமைச்சர் பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
மேலும், சமூக வலைத் தளங்களில் இந்த சம்பவம் தொடர்பான பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்வதை நிறுத்துமாறும், அதுபோன்ற பொய்ப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என்றும் அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் சிங்கள பாதுகாப்பு படை மாற்றி அமைக்கப்பட்டு. அது சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் படையாக மறுசீரமைக்கப்பட வேண்டும். சோரம் போகும் முஸ்லீம் அரசியல் வாதிகள் கவனத்தில் கொள்வார்களா?
ReplyDeleteஇலங்கையில் சிங்கள பாதுகாப்பு படை மாற்றி அமைக்கப்பட்டு. அது சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் படையாக மறுசீரமைக்கப்பட வேண்டும். சோரம் போகும் முஸ்லீம் அரசியல் வாதிகள் கவனத்தில் கொள்வார்களா?
ReplyDeleteActually our security from only Allah.
ReplyDelete