Header Ads



ஓட்டுமொத்த இலங்கையர்களும், எதிர்பார்த்த பெண் (வைரலாகும் படங்கள்)

இலங்கையில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியினால் பல்வேறு அசௌகரியங்களுக்கு பலரும் முகங்கொடுத்தனர்.

அவ்வாறான நெருக்கடியை தீர்க்கும் வகையில் எரிபொருளை ஏற்றிய கப்பல் வருவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்தக் கப்பல் எப்போது வரும் என ஒட்டுமொத்த இலங்கையர்களும் அதற்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நெவஸ்கா லேடி என்ற கப்பல் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்தது.

இதன்மூலம் எரிபொருளுக்காக பல நாட்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சாரதிகளின் மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டது.

இன்றைய தினம் இலங்கையில் அதிகம் பேசப்பட்ட விடயமாக நெவஸ்கா லேடியின் வருகையே காணப்பட்டது.

நெவஸ்கா லேடி குறித்து பலருக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் நெவஸ்கா லேடி கப்பல் இலங்கை மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் அடைந்துள்ளது.

40 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளுடன் நெவஸ்கா லேடி கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இதன்மூலம் நாட்டில் நிலவிய எரிபொருள் நெருக்கடி நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





1 comment:

  1. ஒரு பெண்ணின் முக்கியத்துவம் எவ்வளவு என்பதை இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

    ReplyDelete

Powered by Blogger.