கீதாவின் வெற்றிடத்திற்கு பியசேன
கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற பதவி, முன்னாள் அமைச்சர் பியசேனவிற்கு வழங்கப்படவுள்ளது.
இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர் என்ற அடிப்படையில், கீதாகுமாரசிங்கவினால் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர முடியாது என்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை, உயர் நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது.
இந்தத் தீர்ப்பு கிடைக்கப்பெற்றதும், அவரது பதவி வெற்றிடத்துக்கு முன்னாள் அமைச்சர் பியசேனவின் பெயர் பரிந்துரைக்கப்படும் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுசெயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கீதாகுமாரசிங்கவிற்கு பதிலாக நியமிக்கப்படவுள்ள புதிய நாடாளுமன்ற உறுப்பினரின் பதவியேற்பானது, அதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டதன் பின்னரே இடம்பெறும் என்று நாடாளுமன்ற செயலாளர் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
2016ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில், கீதா குமாரசிங்க ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார்.
எனினும் அவர் சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் குடியுரிமை கொண்டவர் என்றபடியால், 19ம் திருத்தச் சட்டத்தின் கீழ் அவரால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Post a Comment