Header Ads



தலைப்­பிறை பார்க்கும் மாநாடு


றபீ­உனில் அவ்வல் மாதத்­திற்­கான தலைப்­பிறை பார்க்கும் மாநாடு  மௌலவி ஜே.அப்துல் ஹமீத் (பஹ்ஜி) தலை­மையில் 19ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை மஃரிப் தொழு­கையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் நடை­பெ­ற­வுள்­ள­தாக குறித்த பள்­ளி­வா­சலின் பொதுச் செய­லாளர் எம்.தௌபிக் சுபைர் தெரி­வித்தார்.

இம்­மா­நாட்டில் கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலின் நிரு­வா­கிகள், பிறை­க்குழு உறுப்­பி­னர்கள், அகில இலங்கை ஜம்­இ­யத்துல் உலமா சபையின் பிறைக்­குழு உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரிகள், மேமன், ஹனபி பள்ளிவாசல்­களின் நிர்­வா­கிகள் ஆகியோர் கலந்து கொள்­ள­வுள்­ளனர். இம்­மா­நாட்டில் தலைப்­பிறை பற்றி எடுக்­கப்­படும் தீர்­மானம் இலங்கை ஒலி­ப­ரப்­புக்­கூட்­டுத்­தா­பன முஸ்லிம் சேவை­யி­னூ­டாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

1 comment:

  1. இவர்கள் பிறையை தேடிபார்பதில்லை யாரும் இலங்கையில் கண்டதாக சொன்னாலும் ஏற்றுக் கொள்வதும்மில்லை ஆனால் வளைகுடாவில் பிறைகண்டபின் அடுத்த நாள் இவர்களின் முதல்பிறையை தீர்மானம் எடுத்து அறிப்பார்கள் இந்த கூடலின் வழமை இதுதான் என்ன ஆச்சிரியம்மென்றால் இன்று பிறை தோன்ற வாய்பில்லை என்று முடிவெடுப்பார்கள் அடுத்த ஒரு இரு மனித்தியாலங்களில் முழு பூமியில் வாழும் பெரும்பாலான மக்கள் பிறையை கண்டிருப்பார்கள் ஆனால் இவர்கள்....???

    ReplyDelete

Powered by Blogger.