Header Ads



அவதூறு பரப்பாதீர்கள்..!

பொதுபல சேனாக்கும், முஸ்லிம் தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இதுபற்றிய வாதப்பிரதி வாதங்களும், மிகத் தாராளமாக சமூகத்தில் மேலோங்கியுள்ளன.

அத்துடன் முஸ்லிம் தரப்பின் சார்பில், பேச்சில் பங்குகொள்ளுவோர் விடயத்தில் அவதூறு பரப்பும் பிரச்சாரங்களும் அவிழ்த்து விடப்பட்டுள்ளது.

அந்தவகையில் மூத்த ஊடகவியலாளரும், சமூக ஆர்வலருமான என்.எம். அமீன் மீது இட்டுக்கட்டப்பட்ட, அவதூறு பிரச்சாரமொன்று மேகொள்ளப்பபடுகிறது.

அமீன் அவர்களை பொதுவெளியிலும், தனிப்பட்ட வகையிலும் அறிந்தவகையில் பல நெருக்கடியான நேரங்களில் அவர் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பை இந்த முஸ்லிம், சமூகம் நன்கு அறிந்துவைத்துள்ளது. 

என்.எம். அமீனை 5 கோடி ரூபாய்கள் அல்ல, 500 கோடி வழங்கினாலும் அவரை எந்தத் தரப்பினாலும் விலைகொடுத்து வாங்கமுடியாது.

முஸ்லிம் சமூகத்தின் நலன்கருதி அவரும், அவர் தலைமை தாங்கும் அமைப்புக்களும் இந்த சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பை இலகுவில் மறந்துவிட முடியாது. மறக்கவும் கூடாது.

அவர் விடயத்தில் அவதூறு பரப்புவதையும், இட்டுக்கட்டுவதையும் தவிர்க்குமாறு இந்த இழிசெயலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

அவதூறு விடயத்தில் அல்லாஹ்வை பயந்துகொள்ளுவோம், அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சிக்கொள்வோம் என்பதே நாம் சொல்லிக்கொள்ளும் சிறிய உபதேசமாகும்...!

-AAM. Anzir-

4 comments:

  1. for the sake of whole Muslims in sri Lanka. pl allow these leaders to do the best for our community instead of creating chaos. let them proceed to bring peace. they know how handle the situation. grace of Allah, soon we wil see a good results. may Allah guide them on the rite direction to achieve their goals. -

    ReplyDelete
  2. 'மஹிந்த தள்ளிவைத்த பொதுபல சேனா, தற்போதைய அரசாங்கத்துடன் நெருக்கமாகியுள்ளது'
    Thursday, December 22, 2016 Jaffna Muslim 9
    http://www.jaffnamuslim.com/2016/12/blog-post_269.html

    பொதுபல சேனாவுக்கு மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் ஆசிர்வாதம் வழங்கியிருந்தது. தற்போதைய அரசாங்கம் பொதுபல சேனாவுடன் நெருக்கமாகியுள்ளது என முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் குறிப்பிட்டார்.

    இதுதொடர்பில் அமீன் மேலும் குறிப்பிட்டதாவது,

    தற்போதைய அரசாங்கம் தொடர்பில் முஸ்லிம் தலைவர்களிடத்தில் குறிப்பிடும்படியான நம்பிக்கை இல்லை. தமது முறைப்பாடுகள் கிடப்பில் போடப்படுவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுதான் யதார்த்த நிலவரமும் ஆகும்.

    மஹிந்தவின் காலத்தில், மஹிந்தவினால் பொதுபல சேனா தள்ளிவைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆசிர்வாதம் இருந்தது.

    தற்போதை அரசாங்கத்தில் நிலைமை அவ்வாறு அல்ல.

    நீதியமைச்சர் விஜயதாஸா பொதுபல சேனாவை பகிரங்கமாகவே அரவணைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார். இது அபாயகரமானது மாத்திரமல்லாமல் நாட்டிற்கும், கடினப் போக்குடைய பௌத்தசிங்கள தரப்பிற்கும் தவறான வழிகாட்டலையும் வழங்கும்.

    முஸ்லிம்கள் விவகாரத்தில் இந்த அரசாங்கமும், நீதியமைச்சரும் எத்தகைய நிலைப்பாட்டில் பயணிக்கின்றனர் என்பதை இதன்மூலம் முஸ்லிம் சமூகத்தினால் தெளிவாக புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறதெனவும் அமீன் மேலும் சுட்டிக்காட்டினார்.

    ReplyDelete
  3. அரசாங்கம் எதுவாக இருந்தாலும் நிகழ்ச்சி நிரல் ஒன்றுதான். எனவே அரசோடு பேசுவதைவிட நேரடியாக உரிய தரப்புடன் பேசுவதே சரியானது.
    இந்நிலையில் பழைய விடயம் ஒன்றை நீங்கள் (noor nizam) கிளறுவதன் நோக்கம்தான் என்ன?
    யார் குற்றியாயினும் அரிசியானால் சரிதானே!

    ReplyDelete
  4. Be frank with public to avoid criticisms. If kept secret.. no question public will suspect the activities

    ReplyDelete

Powered by Blogger.