அலுத்கமயில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
அலுத்கம பிரதேசத்தில் இன்று பிற்பகல் 2.50 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
அலுத்கம வெளிநாட்டு நாணய மாற்று நிலையமொன்றை கொள்ளையிடச் சென்ற நபர்களே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொள்ளை முயற்சி தோல்வியடைந்ததனைத் தொடர்ந்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
எனினும், இந்த தாக்குதல் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் தலைக்கவசம் அணிந்திருந்தமையினால் அடையாளம் காண முடியவில்லை எனவும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தின் போது, நிறுவனத்தின் சுவர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment