அடுத்த தேர்தலின் வெற்றி பெறுவதே, ராஜபக்ச போன்றோர்களின் ஒரேயொரு குறிக்கோள்
அடுத்த தேர்தலின் வெற்றி பெறுவதே ராஜபக்ச போன்றோர்களின் ஒரேயொரு குறிக்கோள் என வடக்கு மாகாண முதல்வர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அவருடன் முரண்பட்டு நாடாளுமன்றத்தில் பேசி, இந்த அரசாங்கம் அரையும் குறையுமான ஏதோ ஒரு வகையான ஒற்றையாட்சி அதிகாரப்பகிர்வினை பெறுவதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீரப்போவதில்லை.
தமிழ் மக்களுக்கு உண்மையான அதிகாரப் பகிர்வொன்றே தீர்வாக அமையும்.
இவ்வாறான தீர்வு சமஷ்டி அரசியல் யாப்பு ஒன்றின் கீழேயே கிடைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச போன்றவர்களுக்கு அடுத்த தேர்தலே முக்கியமானதாகும்.
எனவே அவர்களுக்கு நாட்டின் ஐக்கியமும் நல்லிணக்கமும் வருங்காலச் சுபீட்சமும் என்பனவற்றில் அக்கறை இல்லை எனவும் வடக்கு முதல்வர் தெரிவித்துள்ளார்.
உங்களை போன்றவர்களின் போக்கு ராஜபக்சே மீண்டும் வர வேண்டும் என்ற முடிவை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது..
ReplyDelete