ரணில் வகுத்த வியூகம், வெற்றி பெறுமா..?
புதிய அரசமைப்பை உருவாக்கும் கூட்டரசின் முயற்சிக்கு எதிர்ப்புகள் வலுத்து வருவதால் அதைச் சமாளிப்பதற்காகவும், மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க திட்டமொன்றை வகுத்துள்ளார்.
இது தொடர்பில் ஆராய்வதற்காகத் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் சிறப்புக் கூட்டமொன்றை நடத்தினார்.
கூட்டத்தில் பௌத்த பிக்குகள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் எனப் பல்துறையினரும் இதில் பங்கேற்றிருந்தனர்.
புதிய அரசமைப்பை உருவாக்கும் அரசின் திட்டத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனங்கள் பற்றியும், எதிர்க்கருத்துக்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.
புதிய அரசமைப்புக்கான முக்கியத்துவம் சம்பந்தமாக மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிபுணர்கள் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவானது கருத்தரங்கு, மாநாடுகள், விழிப்புணர்வுத் திட்டங்கள், ஊடகங்களில் விளம்பரம், சமூகவலைத்தளங்கள் எனப் பல வழிகளிலுமே தெளிவுபடுத்தும் செயற்றிட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
புதிய அரசியலமைப்பு பயன் அற்ற வேலை.
ReplyDeleteWho said?
ReplyDelete