சாய்ந்தமருதும், கல்முனையும் இன்று வழமைக்கு திரும்பின
கடந்த 3 தினங்களாக ஹர்த்தால் கடையடைப்பு என இயல்பு நிலை முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்த சாய்ந்தமருது, கல்முனைப் பிரதேசங்கள் இன்று -02- வழமைக்கு திரும்பியுள்ளன.
இன்றைய தினம் சகல கடைகளும் திறக்கப்பட்டு பாடசாலைகள், வங்கிகள், சந்தைகள் திறக்கப்பட்டு வழமைபோல் இயங்கி வருகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும்,குறித்த பிரதேசங்களில் அமைதியான சூழல் நிலவியுள்ளதாக பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment