Header Ads



டிரம்புக்கு நடுவிரலை காண்பித்த பெண், வேலையிலிருந்து நீக்கம்


 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வாகன அணிவகுப்பு மீது தனது நடுவிரலை காண்பித்து சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் தனது வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

விர்ஜினியாவில் டிரம்பின் கொல்ப் உல்லாச விடுதிக்கு அருகில் கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதி அந்த பெண் செய்கை செய்யும் புகைப்படம் சமூகதளத்தில் பிரபலம் அடைந்துள்ளது.

டிரம்புடன் சென்ற புகைப்படப் பிடிப்பாளர்களே வாகன அணிவகுப்பின் இடையே செல்லும் பெண்ணை புகைப்படம் எடுத்துள்ளனர். நடுவிரலை காண்பிப்பது அவமதிக்கும் செயலென கருதப்படுகிறது.

ஜூலி பிரிஸ்க்மன் என்று அடையாளம் காணப்பட்டிருக்கும் அந்த பெண் தனது படத்தை இணையதள பக்கத்தில் போட்டதை அடுத்து தான் பணிபுரியும் அகிமா எல்.எல்.சி என்ற நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனினும் இது பற்றி அந்த நிறுவனம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதை தவிர்த்துக் கொண்டுள்ளது.

இந்த நிறுவனம் அரச ஒப்பந்ததார நிறுவனமாகும். இதில் இரு குழந்தையின் தாயான 50 வயது பிரிக்ஸ்மன் கடந்த ஆறு மாதங்களாக தொலைத்தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். 

1 comment:

  1. Countries who allow freedom of speech and feelings?....
    Should investigate the reason of her action and intend before ponishing a mother of two kids...

    No freedom even to show their feelings But they talk of Democrazy of other lands

    ReplyDelete

Powered by Blogger.