தேசிய ஷுரா சபையின் ஏற்பாட்டில் மாகாண சபை தோ்தல் எல்லை நிர்ணயம் தொடர்பான முஸ்லிம் தரப்பின் முன்மொழிவுகள்
தேசிய ஷுரா சபையும் (NSC) அதன் அங்கத்துவ அமைப்பான அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிபர் முன்னணிகளின் சம்மேளமும் (ACUMLYF) இணைந்து மாகாண சபை எல்லை நிர்ணயம் தொடர்பாக நாடாளாவிய ரீதியில் மக்கள் அறிவூட்டல் நிகழ்வுகளை நடாத்தியிருக்கின்றன.
அந்தவகையில் சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் தேசிய மட்டத்தில் இரு செயலமர்வுகளும், மாவனல்ல, கண்டி, மன்னார், அநுராதபுரம், குருநாகல், கொழும்பு, பேருவளை ஆகிய இடங்களில் விஷேட கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
அனைத்து மாவட்டங்களதும் முன்மொழிவுகள் உள்ளடங்கியஅறிக்கையானது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உள்ளிட்ட தேசிய அமைப்புக்களின் பூரண ஆதரவுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாகாண சபைகளிலும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் வகையில் நியாயமானதும் ஆக்கபூர்வமானதுமான முன்மொழிவுகள் உள்ளடங்கிய அறிக்கையாக அது அமைந்துள்ளது என தேசிய ஷூரா சபை கருதுகிறது.
முன்மொழிவுகளை எல்லை நிர்ணய குழுவுக்கு அனுப்பிவைக்கும் திகதி நவம்பர் 2 ஆம் திகதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது மேலும் இரு வாரங்களால் நீடிக்கப்பட்டுள்ளது. எனவே,தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையானது எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ள அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சூரா சபையின் அங்கத்து அமைப்புக்களது பிரதிநிதிகளுடனான சந்திப்பின் பின்னர் மேலும் மேம்படுத்தப்பட்டு உரிய மக்கள் ஆணையுடன் அதற்கு அடுத்த வாரம் எல்லை நிர்ணய குழுவிடம் கையளிக்கப்படும்.
உயர்மட்ட அரசியல் மற்றும் சிவில் சமூக கலந்துரையாடல்கள் மூலம் முன்மொழிவுகளை அடைய உரிய அழுத்தம் செலுத்த தாம் உத்தேசித்துள்ளதாக தேசிய ஷூரா சபையின் அரசியல் துறைக்கான உப குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வேண்டப்படின் ஜனாப் அஜிவதீன் அவர்களை 0714422146அல்லது ajiwa2001@yahoo.com ஊடாக தொடர்புகொள்ள முடியும்.
Post a Comment