தமிழ் தேசிய கூட்டமைப்பில் லடாய் - தனித்துப் போட்டி என்கிறார் சுரேஸ்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பங்கேற்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான சந்திப்பு யாழ்ப்பாணம் மார்டீன் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் சற்று முன்னர் ஆரம்பமானது.
இந்தச் சந்திப்பில் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப் பங்கேற்கவில்லை.
அந்தக் கட்சி கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட உள்ளதென கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
அதனால் அந்தக் கட்சி கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான இன்றைய சந்திப்பை தவிர்த்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகள் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளன.
Post a Comment