லெபனான் பிரதமர் பற்றிய, சவூதியின் அறிவிப்பு
லெபனான் நாட்டு பிரதமராக இருந்தவர் சாத் அல்-ஹரிரி. இவர் கடந்த 4ந்தேதி சவுதி அரேபியா சென்றார். சவூதி அரேபியாவில் இருந்தபடியே, ’தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பதவி விலகுகிறேன்’ என்று அறிவித்தார். ஆனால் அதனை லெபனான் அதிபர் மைக்கேல் ஆன் ஏற்கவில்லை. அவர் உடனடியாக நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று அதிபர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில், ஹரிரி சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு உள்ளார் என லெபனான் அதிபர் மைக்கேல் ஆன் நேற்று கூறினார்.
லெபனான் பிரதமர் கைது செய்யப்பட்டு உள்ளார் என்ற குற்றச்சாட்டை சவூதி அரேபியா இன்று மறுத்துள்ளது.
இதுபற்றி ரியாத் நகரில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி ஏடெல் அல்ஜூபெய்ர் பேசும்பொழுது, ஹரிரி தனது சொந்த விருப்பத்தின்பேரில் இங்கு வசித்து வருகிறார். அவர் விரும்பும்பொழுது இங்கிருந்து செல்லலாம் என கூறியுள்ளார்.
அவையெல்லாம் பொய்யான குற்றச்சாட்டுகள். பிரதமர் ஒருவரை, குறிப்பிடும்படியாக ஓர் அரசியல் முக்கிய பிரமுகர் அதுவும் நட்பு ரீதியில் உள்ள ஒருவரை சவூதி அரேபியா கைது செய்துள்ளது என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் கூறியுள்ளார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உடன் பேசுவதற்காக ஹரிரி அங்கு செல்கிறார் என்ற அறிவிப்பு தீர்வுக்கான தொடக்கம் என ஆன் இன்று கூறியுள்ளார்.
Post a Comment