உற்சாகத்துடன் களமிறங்கியுள்ள, சிறிலங்கா பொதுஜன முன்னணி
சிறிலங்கா பொதுஜன முன்னணி உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்த ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள நிலையில் இன்று தொடக்கம் மாவட்டச் செயலகங்களில் கட்டுப்பணத்தைச் செலுத்த முடியும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில்,மகிந்த ராஜபக்சவினால் ஜி. பீரிஸ் தலைமையில், பசில் ராஜபக்சவை தேசிய அமைப்பாளராக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறிலங்கா பொது ஜன முன்னணியின் சார்பில் இன்று களுத்துறை, காலி, கம்பகா மாவட்டங்களில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன முன்னணியின் மாவட்ட அமைப்பாளர்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
அதேவேளை கொழும்பு, புத்தளம், அனுராதபுர மாவட்டங்களில் நாளை கட்டுப்பணம் செலுத்தப்படும் என்றும் அந்தக் கட்சி அறிவித்துள்ளது.
Post a Comment