லங்கா சதொசவில் அத்தியாவசிய, பொருட்களின் விலைகள் குறைப்பு
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சதொச தெரிவித்துள்ளது.
இந்நிலையில் , அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றை வௌியிட்டு சதொச விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ கிராம் சம்பா அரிசி 78 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் - மேலும் சில பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி , ஒரு கிலோ கிராம் மைசூர் பருப்பு 148 ரூபாவுக்கும் , 425 கிராம் டின் மீன் 129 ரூபாவுக்கும் , ஒரு கிலோ கிராம் காய்ந்த மிளகாய் 215 ரூபாவுக்கும் , ஒரு கிலோ கிராம் நெத்தலி 525 ரூபாவுக்கும் , ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் 167 ரூபாவுக்கும் , ஒரு கிலோ கிராம் வௌ்ளை சீனி 106 ரூபாவுக்கும் மற்றும் ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கு 125 ரூபாவுக்கும் சதொச விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment