அமெரிக்காவில் இலங்கை பெண், குத்திக் கொலை
அமெரிக்காவில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நிவ்யோர்க் Staten தீவு பகுதியில் நேற்று பிற்பகல் அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
63 வயதான பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அவரது முகம் மற்றும் உடலில் கிட்டத்தட்ட 15 கத்தி குத்து காயங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரை காப்பாற்ற முயற்சித்த Mark என்ற 56 வயதுடைய நபர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளார்.
உயிரிழந்தவர் Staten தீவு பகுதியை சேர்ந்த கீதா எனப்படும் இலங்கை பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பெண் ஒருவர் மீது கொடூரமான கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்படுவதை அவதானித்த அயல் வீட்டு நபர் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதனை அவதானித்த சந்தேக நபர் மேலும் தீவிரமாக அவரை குத்திவிட்டு தப்பி செல்ல முயன்றுள்ளார்.
இதன்போது உடனடியாக செயற்பட்ட பொலிஸார் 27 வயதான சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கீதா வங்கிக்கு சென்று வந்த சில மணி நேரங்களிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், திருட்டுச் சம்பவம் ஒன்று கொலை சம்பவமாக மாறியுள்ளதென கீதாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சில மணி நேரங்களில் இலங்கை உறவினர்களின் திருமணத்திற்கு செல்ல கீதா உட்பட குடும்பத்தினர் ஆயத்தமாகியிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment